காமன்வெல்த் ஆடவர் ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி...!

காமன்வெல்த்தின் ஆடவர் ஆக்கி அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.;

Update: 2022-08-06 19:38 GMT

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆண்களுக்கான ஆடவர் ஆக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி - தென் ஆப்பிரிக்க அணியை எதிர் கொண்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், அபிஷேக் மற்றும் ஜுக்ராஜ் சிங் ஆகியோரின் கோல்கள் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறிதியானது. இந்திய அணி இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியை எதிர் கொள்ளும்.

Tags:    

மேலும் செய்திகள்