காமன்வெல்த் போட்டி: பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றார் பவினா படேல்
இந்தியாவின் நட்சத்திர பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் தங்கப் பதக்கம் வென்றார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பவினா படேல் நைஜீரியாவின் இஃபேச்சுக்வுடே இக்பியோயை எதிர் கொண்டார். இப்போட்டியில் பவினா படேல் 3-5 என்ற கணக்கில் இஃபேச்சுக்வுடே இக்பியோயை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.