காமன்வெல்த் போட்டி : இந்திய ஆக்கி அணி வீராங்கனை நவ்ஜோத் கௌர்-க்கு கொரோனா

இந்திய ஆக்கி வீராங்கனை நவ்ஜோத் கௌர் கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.;

Update:2022-07-31 13:19 IST

Image Courtesy : Hockey India 

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்திய ஆக்கி மகளிர் அணி 2 போட்டியில் விளையாடி 2 ல் வெற்றி பெற்றுள்ளது.இந்த நிலையில் இந்திய ஆக்கி வீராங்கனை நவ்ஜோத் கௌர்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.இதனால் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக இந்திய ஆக்கி அணியில் வீராங்கனை சோனிகா சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்