காமன்வெல்த் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுர்-க்கு ரூ.40 லட்சம் பரிசு : பஞ்சாப் அரசு அறிவிப்பு
வெண்கலப்பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுர்க்கு ரூ.40 லட்சம் பரிசு தொகை, வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல் மந்திரி அறிவித்துள்ளார்.;
பர்மிங்ஹாம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான (71 கிலோ) பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் ஸ்நாட்ச் பிரிவில் 93 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 119 கிலோவும் மொத்தம் (119 + 93) மொத்தம் 212 கிலோ தூக்கி அசத்தினார்.இந்நிலையில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுர்க்கு ரூ.40 லட்சம் பரிசு தொகை, வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல் மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ஹர்ஜிந்தர் கவுருக்கு வாழ்த்துகள். உங்கள் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.