காமன்வெல்த் போட்டி: இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர் அணி

ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

Update: 2022-07-29 13:22 GMT

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியா அணியுடன் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் விளையாடியது. தொடக்க வீராங்கணைகளாக மந்தனாவும், ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மந்தனா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பான விளையாடிய ஷபாலி வர்மா 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். யாஷிகா பாட்யா 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், கடைசிகட்டத்தில் இந்திய அணி ரன்குவிக்கமுடியமல் தவித்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தவித்தது. இதனால், இந்திய அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பின்வரிசையில் களமிறங்கிய ஆஸ்லீக் கார்ட்னர் அதிரடியாக விளையாடினார். அவருக்கு கிரேஷ் ஹாரீஸ் பக்கபலமாக விளையாடி 37 ரன்கள் குவித்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை கடந்து 3 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்லீக் கார்ட்னர் 35 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இந்திய அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்