காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி : முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி

இந்தியாவின் பதக்க நம்பிக்கை பி.வி. சிந்து மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் நபாஹா உடன் மோதினார்.;

Update: 2022-08-04 10:30 GMT

Image Tweeted By @Media_SAI

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் பதக்க நம்பிக்கை பி.வி. சிந்து மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் நபாஹா உடன் மோதினார்.

இந்த போட்டியில் சிந்து 21-4, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்