காமன்வெல்த் மகளிர் ஆக்கி - வெண்கலம் வென்றது இந்திய அணி

மகளிருக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

Update: 2022-08-07 10:30 GMT

image courtesy: SAI Media twitter

பர்மிங்காம்,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மகளிருக்கான ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இதையடுத்து, ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஆக்கியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். தற்போது இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்