காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ரோஹித் டோகாஸ்
இந்திய குத்துச்சண்டை வீரர் ரோஹித் டோகாஸ் ஜாம்பியாவின் ஸ்டீபன் ஜிம்பாவிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.;
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
காமன்வெல்த்தின் ஆண்களுக்கான ( 67 கிலோ ) குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ரோஹித் டோகாஸ் ஜாம்பியாவின் ஸ்டீபன் ஜிம்பாவை எதிர் கொண்டார். இப்போட்டியில் ரோஹித் டோகாஸ் 2-3 என்ற கணக்கில் ஜாம்பியாவின் ஸ்டீபன் ஜிம்பாவிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் அவர் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தப்பதக்கத்தின் முலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 39 ஆக அதிகரித்து உள்ளது. இந்த பதக்கத்துடன் சேர்த்து 12 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.