காமன்வெல்த்: மல்யுத்த பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் - இந்தியாவின் வினேஷ் போகட் தங்கம் வென்றார்
இந்திய வீராங்கனை வினேஷ் போகட் தொடர்ந்து 3 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.;
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 10 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 32 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான (53 கிலோ) மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் இலங்கையின் சாமோத்யா கேஷானி மதுரவ்லாகே டானை சந்தித்தார். இதில் வினேஷ் போகட் சாமோத்யா கேஷானி மதுரவ்லாகே டானை வீழ்த்தியதின் மூலம் தங்க்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் தொடர்ந்து 3 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், ஒலிம்பிக்கிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்துயாவின் பதக்க எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 11 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 33 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.