தொடர்ந்து ஓடிடி தளத்தில் முன்னிலையில் இருக்கும் 'மகாராஜா'

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்து உள்ளது.

Update: 2024-07-15 07:47 GMT

சென்னை,

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் மகாராஜாவுக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், 'மகாராஜா' திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை கடந்துள்ளது என படக்குழு அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து, இந்த படம் கடந்த 12-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

அப்பா-மகள் பாசத்தை சொல்லும் படமாக வெளியான மகாராஜா படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள், தற்போது ஓடிடியில் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் யூகிக்க முடியாத அளவில் இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வரும் இந்தப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தொடர்ந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்