ஓ.டி.டி.யில் வெளியாகும் 'நுனக்குழி' திரைப்படம்

இயக்குனர் ஜித்து ஜோசப் 'நுனக்குழி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Update: 2024-09-09 10:50 GMT

சென்னை,

மலையாளத்தில் நடிகர் மோகன்லாலை வைத்து 'நேரு' என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஜித்து ஜோசப். இவர் தற்போது 'நுனக்குழி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாசில் ஜோசப் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் சித்திக், மனோஜ் கே ஜெயன், பைஜு சந்தோஷ், அல்தாப் சலீம், லீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவை திரைப்படமான இது, சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 13-ந் தேதி ஜி5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்