78வது சுதந்திர தினம் - கவிஞர் வைரமுத்து வாழ்த்து

சுதந்திர தினத்தையொட்டி, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2024-08-15 09:38 IST

சென்னை,

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;

"ஒரு சமயப் பண்டிகையின் கொண்டாட்டக் கூறுகள் ஒரு தேசியத் திருவிழாவுக்கு ஏனில்லை?

நான் அறியாமலே இந்தக் கொண்டாட்டம் எனக்காகவும்தான் என்ற உரிமைப்பாடு ஏன் உணரப்படுவதில்லை?

தேசத்தைத் தனி மனிதனும் தனிமனிதனை தேசமும் சுரண்டுவது ஓயும்வரை 142 கோடிக்கும் சுதந்திரம் பொதுவுடைமை ஆவதில்லை

அதுவரை அது வெறும் அரசாங்க விழாதான் மற்றுமொரு விடுமுறை நாள்தான்

நம்பிக்கையோடு சொல்லிப் பழகுங்கள் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்