'டாக்சிக்' படப்பிடிப்புக்கு முன்பு குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்ற யாஷ்

'டாக்சிக்' படப்பிடிப்புக்கு முன்பு நடிகர் யாஷ் தனது குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.;

Update: 2024-08-07 12:34 GMT

பெங்களூரு,

நடிகர் யாஷ் நடிக்க உள்ள தனது 19-வது திரைப்படத்திற்கு 'டாக்சிக்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை யாஷ் தொடங்க உள்ளார்.

அதன்படி, படப்பிடிப்பை பெங்களூருவில் நாளை தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், 'டாக்சிக்' படப்பிடிப்புக்கு முன்பு நடிகர் யாஷ் தனது குடும்பத்துடன் கர்நாடகாவில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. டாக்சிக் படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதில், நடிகர் யாஷ், ஸ்டைலிசான டானாக நடிக்கிறார் என்றும் இப்படம் 1950-1970 காலகட்டத்தை மையமாக கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான பின்னணியில் உருவாகும் ஆக்சன் படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்