'ஹாலிவுட் படங்களில் இதனால்தான் நடிக்கவில்லை' - ஷாருக்கான்

ஹாலிவுட்டில் நடிக்காதது மற்றும் நடிப்பதற்கான வாய்ப்பு குறித்து ஷாருக்கான் பேசினார்.

Update: 2024-08-16 05:17 GMT

சென்னை,

நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட்டின் பிரபல நடிகரும் ஆவார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பதான், ஜவான்' படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களும் ரூ.1,000 கோடி வசூலித்தது மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில், ஹாலிவுட்டில் நடிக்காதது மற்றும் நடிப்பதற்கான வாய்ப்பு குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

"இது உலகின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய சினிமா என நான் நினைக்கிறேன், எனக்கு வழங்கப்படும் எந்தவொரு பாத்திரமும் இந்திய பார்வையாளர்களிடமிருந்து பெற்ற மகத்தான மரியாதை மற்றும் பாராட்டுக்கு "தகுதியாக" இருக்க வேண்டும். அப்படி எந்த கதையும் வரவில்லை, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்