எஸ்.எஸ்.ராஜமவுலி - மகேஷ் பாபு படத்தின் கதாநாயகி இவரா?

ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தையடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.

Update: 2024-12-16 11:01 GMT

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக ரூ. 900 முதல் ரூ.1,000 கோடி செலவில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி நிறைவடைந்துள்ளதையடுத்து, இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மகேஷ் பாபு துவங்குவார் என்று தெரிகிறது.

இதனையடுத்து, இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை பற்றி அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், தற்போது கதாநாயகி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ராவிடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

தற்போது இவர் ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் நிலையில், இது உறுதியாகும் பட்சத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய படத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பார். கடைசியாக இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தி ஸ்கை இஸ் பிங்க்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்