இவரால் 'தளபதி' படப்பிடிப்பில் தரையில் தூங்கினாராம் ரஜினிகாந்த் - ஏன் தெரியுமா?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் தளபதி.;
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் தளபதி. இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி , அரவிந்த்சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தார்கள் .
இப்படத்தின் மூலம்தான் அரவிந்த் சாமி சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இப்படத்தில் நடித்தபோது தன்னால் ரஜினிகாந்த் தரையில் தூங்கியதாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பின்போது முன்னதாகவே அரவிந்த் சாமி அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். காத்திருக்க வேண்டியதிருந்ததால் அந்த இடத்தை சுற்றிப்பார்த்திருக்கிறார்.
அப்போது மிகவும் சோர்வாக இருந்த அவர் அங்கிருந்த ஒரு அறையில் தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் எழுந்த அவர் ரஜினிகாந்த் தரையில் தூங்குவதை பார்த்து அதிர்ச்சியடைதிருக்கிறார். பின்னர்தான் தெரிந்திருக்கிறது அது ரஜினிகாந்தின் அறை என்று. நடிகர் ரஜினிகாந்த், அரவிந்த்சாமியை தொந்தரவு செய்ய விருப்பாததால் தரையிலேயே உறங்கியுள்ளார். இதனை அரவிந்த் சாமி ரசிகர்களுடனான உரையாடலின்போது தெரிவித்தார்.