'அவருடன் என்னை ஒப்பிடுவது அவமானம்'- துல்கர் சல்மான்

முன்னதாக துல்கர் சல்மானை பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டு இணையத்தில் செய்திகள் பரவின.;

Update: 2024-07-30 02:48 GMT

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் 2012ம் ஆண்டு வெளியான 'செகண்ட் ஷோ' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 'தீவ்ரம்', பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக துலகர் சல்மானை ஷாருக்கானுடன் ஒப்பிட்டு இணையத்தில் செய்திகள் பரவின. இதற்கு கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த சீதா ராமம் படத்தின் இந்தி பதிப்பின்போது செய்தியாளர் சந்திப்பில் துல்கர் சல்மான் விளக்கமளித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

'படத்திலும் சரி நிஜத்திலும் சரி ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் நம் அனைவருக்கும் ஒரு பெரிய முன்மாதிரி. என்னை அவருடன் ஒப்பிடுவது அவரை அவமானப்படுத்துவது போன்றது, ஏனென்றால் ஒரே ஒரு ஷாருக்கான் மட்டுமே இருக்க முடியும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்