தெலுங்கில் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகும் 'ஒரசாத' பாடல் புகழ், விவேக் மற்றும் மெர்வின்
பல பிளாக்பஸ்டர் பாடல்களை கொடுத்த விவேக் மற்றும் மெர்வின் தற்போது தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்கள்.;
சென்னை,
வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின். இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'வடகறி' படத்திற்கு இசையமைத்து பிரபலமானார்கள். அதனைத்தொடர்ந்து, புகழ், டோரா, குலேபகாவலி ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். இப்படங்களில் வரும் பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.
இவ்வாறு பல பிளாக்பஸ்டர் பாடல்களை கொடுத்த இந்த இசையமைப்பாளர்கள், தற்போது தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்கள். அதன்படி, நடிகர் ராம் பொத்தினேனியின் 22-வது படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைக்கிறார்கள். இது குறித்தான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில், ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். இப்படத்தை மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்குகிறார். சமீபத்தில், இப்படத்தின் பூஜை நடைபெற்றது.