'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்

அருண் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Update: 2024-10-22 12:59 GMT

சென்னை,

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து 2023-ல் தயாரித்த 'வல்லவனுக்கும் வல்லவன்' கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 'பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 101-வது படமான இதை, ஹேமா ருக்மணி தயாரிக்கிறார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, முதல் பாடல் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்