திரிஷா முதல் பிரியங்கா மோகன் வரை: கேமியோ ரோலில் பாடலுக்கு நடனமாடிய நடிகைகள்

முன்னணி நடிகைகள் சில படங்களில் கேமியோ ரோலில் நடித்தும், பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர்.

Update: 2024-09-09 07:35 GMT

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் சில படங்களில் கேமியோ ரோலில் நடித்தும், பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர். அதன்படி சிம்ரன், ஸ்ரேயா சரண், மீனா உள்ளிட்ட நடிகைகள் சில பாடல்களுக்கு கேமியோ ரோலில் நடனமாடியிருந்தனர். அதன்படி, திரிஷா முதல் பிரியங்கா மோகன் வரை  கேமியோ ரோலில் பாடலுக்கு நடனமாடிய சில நடிகைகளை தற்போது காணலாம்.

திரிஷா

விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் தி கோட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். இப்படத்தில் கேமியோ ரோலில் 'மட்ட' பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியிருந்தார்.

நயன்தாரா

நடிகை நயன்தாரா இரண்டு படங்களில் கேமியோ ரோலில் பாடல்களுக்கு நடனமாடியிருக்கிறார். அதன்படி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் வரும் 'பல்லேலக்கா' பாடலுக்கும், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் வரும் 'லோகல் பாய்ஸ்' பாடலுக்கும் நடிகை நயந்தாரா நடனமாடியிருந்தார்.

பிரியங்கா மோகன்

தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் நடனமாடியிருந்தார்.

ஆண்ட்ரியா 

விஷால் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பூஜை படத்தில் நடிகை ஆண்ட்ரியா கேமியோ ரோலில் 'சோடா பாட்டில்' பாடலுக்கு நடனமாடியிருந்தார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

சமந்தா

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா' படத்தின் முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா' பாடலுக்காக சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது.

தமன்னா

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகை தமன்னா 'காவாலயா' என்ற பாடலுக்கு நடனமாடி இந்த படத்தின் வெற்றிக்கு உதவியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்