முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்

முதல் நாளில் ரூ.100 கோடியை பல படங்கள் கடந்துள்ளன.

Update: 2024-08-10 21:13 GMT

சென்னை,

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, வெளியாகி முதல் நாளில் ரூ. 100 கோடியை பல படங்கள் கடந்துள்ளன. அதன்படி, முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களை தற்போது காணலாம்.

1. பாகுபலி 2

பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், தமன்னா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் பாகுபலி. இப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் வெற்றியைத்தொடர்ந்து பாகுபலி 2 உருவானது. ரூ.1,788 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருந்தார். இப்படம் முதல் நாளில் ரூ.138 கோடி வசூலித்தது.

2. ஆர்.ஆர்.ஆர்.

ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஆலியா பட் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் ரூ.1,230 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்றது. இந்த படத்தையும் எஸ்.எஸ்.ராஜமவுலிதான் இயக்கினார். இப்படம் முதல் நாளில் ரூ.134 கோடி வசூலித்தது.

3. கேஜிஎப் 2

ஸ்ரீநிதி ஷெட்டி, யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் வெற்றியைத்தொடர்ந்து கேஜிஎப் 2 உருவானது. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் ரூ.1,215 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் முதல் நாளில் ரூ.131 கோடி வசூலித்தது.

4. கல்கி 2898 ஏடி

பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கிய இப்படம் இதுவரை ரூ.1,030 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.104 கோடி வசூலித்தது.

5. சலார்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் 'சலார்'. இந்த படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலித்தது.

6. ஜவான்

நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ஜவான். ரூ. 300 கோடி பட்ஜெட்டில்  உருவான இப்படம் ரூ.1,160 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தமிழ் இயக்குனரான அட்லி இயக்கினார். இப்படம் முதல் நாளில் ரூ.92 கோடி வசூலித்தது.

7.ஆதிபுருஷ்

ராமாயண கதையை மையமாக வைத்து உருவான படம் ஆதிபுருஷ். இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்தனர். இப்படம் முதல் நாளில் ரூ.89 கோடி வசூலித்தது.

8. சாஹோ

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் சாஹோ. இப்படம் முதல் நாளில் ரூ.87 கோடி வசூலித்தது.

9. லியோ

லோகேஷ் கனகராஜ் இய்க்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் லியோ. விஜய் நடிப்பில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.78 கோடி வசூலித்தது.

10. அனிமல்

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். இப்படம் முதல் நாளில் ரூ.75 கோடி வசூலித்தது

Tags:    

மேலும் செய்திகள்