இணையத்தில் வைரலாகும் 'ரயில்' பட டிரெய்லர்

தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு முதலில் 'வடக்கன்' என்று பெயரிடப்பட்டிருந்தது.

Update: 2024-06-10 04:10 GMT

சென்னை,

வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'ரயில்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இந்த படத்தின் மூலம்தான் அறிமுகமாகிறார்கள்.

டிஸ்கவரி சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் படத்தொகுப்பு செய்து இருக்கிறார். தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு முதலில் 'வடக்கன்' என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த படத்தின் தலைப்பு 'ரயில்' என்று மாற்றப்பட்டது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். 'ரயில்' திரைப்படம் வருகிற 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்