டிசம்பரில் தொடங்கும் 'புறநானூறு' படப்பிடிப்பு...!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 'புறநானூறு' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.;

Update:2024-10-28 20:31 IST

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று  திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் 'புறநானூறு' திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணத்தால் இதில் இருந்து சூர்யா விலகிவிட்டார். தற்போது சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்