'சூர்யா 45' திரைப்படத்தில் இணைந்த 'ஜவான்' பட ஒளிப்பதிவாளர்

‘சூர்யா 45’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2024-12-08 15:18 GMT

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14-ந் தேதி 'கங்குவா' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவும் திரிஷாவும் இணைந்து மவுனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 19 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கிடையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் பூஜையுடன் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா 45-ன் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது. படத்தின் ஒளிப்பதிவாளரை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஜிகே விஷ்ணு மேற்கொள்கிறார். இவர் இதற்கு முன் மெர்சல், பிகில், ஜவான், கில்லாடிபோன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவார்.

Tags:    

மேலும் செய்திகள்