மோகன்லால் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த பிருத்விராஜ்

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது.;

Update:2025-03-18 09:49 IST
Stay tuned for a landmark announcement! -Prithviraj

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான லைகாவுக்கும், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக, லைகா நிறுவனம், எம்புரான் படம் வெளியாவதற்கு முன்பாகவே தங்கள் முதலீடு செய்த தொகையை வட்டியுடன் திருப்பித் கேட்பதாக தகவல் வெளியானது.

ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்ந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பிருத்விராஜ் தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்