'இனி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்' - நடிகை சோனாக்சி சின்கா

இந்தி நடிகர் ஜாகிர் இக்பாலை சோனாக்சி சின்கா காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.;

Update:2024-07-15 08:02 IST

சென்னை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்கா. இவர் இந்தி நடிகர் ஜாகிர் இக்பாலை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ள ககுடா படத்தில் சோனாக்சி சின்கா நடித்துள்ளார். இப்படம் ஜீ5-ல் கடந்த 12-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன் என்று சோனாக்சி சின்கா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நடிகையாக எனக்கு சவாலாக இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவு செய்து இருக்கிறேன்.

இரண்டு பாடல்கள், நான்கு காட்சிகளில் நடிக்க வேண்டும் என விரும்பவில்லை. தற்போது என்னை தேடி நிறைய கதைகள் வருகின்றன. இனி எனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

எனக்கு பேய் படங்கள் என்றால் இஷ்டம். பேயுடன் காமெடியும் இணைந்து வரும் படங்கள் மிகவும் பிடிக்கும். அது போன்ற கதைகளில் நடிக்க விரும்புகிறேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்