டான் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் 24-வது படத்தை டான் பட இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' படம் உலகளவில் ரூ.320 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு எஸ்கே23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 24-வது படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. டான் படம் உலகளவில் ரூ130 கோடி வசூலித்தது.
மேலும் 24-வது படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த படத்திற்கு 'பாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மெகா ஹிட் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாருடனும் இணையவுள்ளார் . பின் சுதா கொங்கராவுடனான புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். விஜய்யுடன் கேமியோ கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான கோட் படமும் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.