சின்னத்திரை இசை நிகழ்ச்சியில் பாடகி சைந்தவி

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவரான பாடகி சைந்தவி பங்கேற்றுள்ளார்.;

Update: 2024-11-17 09:57 GMT

சென்னை,

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, இருவரும் பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் சைந்தவி பல பாடல்களை பாடி உள்ளார். தனுஷ் நடித்த அசுரன் படத்தில் இடம் பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடலை சைந்தவி பாடியுள்ளார். விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஜி.வி. பிரகாஷ் நடிப்பு, இசையமைப்பு என வழக்கம் போல படு பிஸியாக இருக்கிறார். ஆனால், சைந்தவி பெரும் பாலும் மீடியாக்களில் தென்படாமல் இருந்தார்.

இந்நிலையில், சைந்தவியின் புதிய வீடியோ ஒன்றை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சைந்தவி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சரிகமப லிட்டில் சாம்ஸ் 4' என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். இந்த இசை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பாடகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூற இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்