பாலகிருஷ்ணா மகன் நடிகராக அறிமுகமாகும் படத்தில் ரஜினி பட நடிகை ?

பிரசாந்த் வர்மா இயக்கும் 'சிம்பா' படத்தின் மூலம் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார்.;

Update: 2024-10-20 06:27 GMT

சென்னை,

'ஹனுமான்' படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடி வசூலித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. இவரது அடுத்த படம் 'சிம்பா'. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார். ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்சன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.

தற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகை ஷோபனா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் இவர் மோக்சக்னாவுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஷோபனா 1984 ஆம் ஆண்டு 'ஏப்ரல் 18' படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து 1984-ம் ஆண்டு கமல் நடித்து வெளியான 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் ஷோபனா. அதன் பின் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். தமிழில் கடைசியாக இவர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்