'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்

சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-08-11 15:56 GMT

சென்னை,,

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'மாமனிதன்' விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க வருகிறார்.

புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துவங்கியது. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதுகின்றனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது.

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "அனைவரின் ஒத்துழைப்பில் நான் இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்