'மலைக்கோட்டை வாலிபன்' படத்திற்கு கிடைத்த விமர்சனம் - 3 வாரங்கள் சோகத்தில் மூழ்கிய இயக்குனர்

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மலைக்கோட்டை வாலிபன்'.

Update: 2024-12-06 05:32 GMT

சென்னை,

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிஜோ ஜோஸ். இவர் 'ஜல்லிக்கட்டு', 'அங்கமாலி டைரிஸ்', 'சுருளி', 'நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானார். இவர், சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் மோகன்லாலுடன் சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இந்த விமர்சனங்களால் தனக்கு ஏற்பட்ட சோகத்தில் இருந்து வெளிவர 3 வாரங்கள் ஆனதாக இயக்குனர் லிஜோ ஜோஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் மூலம், நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தில் பார்த்த மறக்கமுடியாத திரைப்படக் காட்சிகளுக்கு மரியாதை செலுத்த முயற்சித்தேன். கமல் சார், அமிதாப் சார் போன்ற நட்சத்திரங்களின் திரையரங்குகளை அதிரவைத்த காட்சிகளை மீண்டும் உருவாக்க விரும்பினேன்.

ஆனால், 'மலைக்கோட்டை வாலிபன்' படத்திற்கு இப்படி ஒரு விமர்சனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதனால் சோகத்தில் மூழ்கிய நான், அதிலிருந்து வெளிவர மூன்று வாரங்கள் ஆகின' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்