'படங்களில் பெண்களை அவர்கள்...'- அனிமல், புஷ்பா பட இயக்குனர்கள் குறித்து ராஷ்மிகா பேச்சு

சந்தீப ரெட்டி வங்கா மற்றும் சுகுமார் ஆகியோர் பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக பார்ப்பதாக ராஷ்மிகா கூறினார்.

Update: 2024-12-18 10:02 GMT

சென்னை,

ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அனிமல் மற்றும் புஷ்பா 2 படத்தின் வெற்றி அவரது புகழை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அது அவரை இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாற்றியுள்ளது.

இந்நிலையில், அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் ஆகியோரை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'சந்தீப் ரெட்டி வாங்கா மற்றும் சுகுமார் சாரிடம் நான் ஒரு விஷயத்தை பார்த்திருக்கிறேன். அது பெண்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதை. பெண்களை உதவி தேவைப்படும் ஒருவராக அவர்கள் பார்ப்பதில்லை, சக்தி வாய்ந்தவர்களாக நினைக்கிறார்கள். இது அவர்களின் படங்களின் மூலம் தெரிகிறது.

கீதாஞ்சலி மற்றும் ஸ்ரீவள்ளியை பாருங்கள், இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் ரன்விஜய் மற்றும் புஷ்பா, 200 பேரைக் கொல்கிறார்கள் என்பது தெரியும், ஆனாலும், அவர்கள் தவறு செய்யும்போது அவர்களை எதிர்த்து நிற்கும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறது.

200 பேரைக் கொல்லக்கூடிய ஒரு ஆணுக்கு எதிராக ஒரு பெண் நிற்பது பெண்கள் மீதான மரியாதையால் சாத்தியம் என்று வங்காவும் சுகுமாரும் நினைக்கிறார்கள்' என்றார். ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தில் கீதாஞ்சலியாகவும் புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்