'நான் பெற்ற முதல் சம்பளம் ரூ.500தான்' - பிரியாமணி உருக்கம்
என்னுடைய முதல் படத்திற்கு நான் பெற்ற சம்பளம் ரூ.500தான் என்று நடிகை பிரியாமணி கூறினார்.;
சென்னை,
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி 'பருத்திவீரன்' படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 40 வயதை கடந்தும் பிரியாமணி கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 'மைதான்' என்ற இந்தி படத்தில் நடித்தும் பாராட்டு பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவரது பிறந்தநாளையொட்டி அவர் ஒரு தனியார் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'என்னுடைய முதல் படத்திற்கு நான் பெற்ற சம்பளம் ரூ.500தான். நான் அந்த பணத்தை பத்திரமாக வைத்துள்ளேன். மேக்கப் இல்லாமல் திரைப்படங்களில் நடிக்க ஆசை உள்ளது.
தற்போது நான் கோடிகளில் சம்பளம் பெறுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் எப்போதும் முதன்முதலாக மாடலிங் மூலம் பெற்ற சம்பளத்தை நினைத்துப் பார்ப்பேன். அந்த தொகை மிக, மிக குறைவு' என்றார்.