காதலனுடன் ஆஸ்திரேலியாவில் பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் வைரல்
பிரியா பவானி சங்கர் தனது காதலனுடன் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்.;
சென்னை,
பவானி சங்கர் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான "ரத்னம்" திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், அவர் தனது காதலனுடன் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். தற்பொழுது அவருடன் ஜாலியாக ஆஸ்திரேலியாவில் சுற்றி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.