போர்ச்சுகல் ரேஸ் பயிற்சி - விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் கார்
போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் கலந்துகொள்ள உள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். இந்த தொடரில் அஜித்தின் அணி, போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இவரது வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அஜித் அடுத்த ரேஸுக்கு தயாராகி இருக்கிறார். அதன்படி, போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பயிற்சியில் அவர் இன்று ஈடுபட்டிருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கி இருக்கிறது.
இது தொடர்பாக அஜித் கூறுகையில், "எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி. இன்றைய பயிற்சியின்போது கூட எனது கார் விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான காரை மெக்கானிக் குழுவினர் சரி செய்து விட்டனர்" என்றார்.