'எங்களது சேவை விவசாயிகளுக்கு ஒரு அணில் சேவையாக இருக்கும்' - நடிகர் கார்த்தி
'மண் நல புரட்சிப் பாதை' என்னும் நூலின் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கார்த்தி கலந்து கொண்டார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் சமீபத்தில், இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும், 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எழுதிய 'மண் நல புரட்சிப் பாதை' என்னும் நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக உழவன் பவுண்டேஷன் நிறுவனரும் திரைப்பட நடிகருமான கார்த்தி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது கார்த்தி, சினிமா வெளிச்சத்தில் இருந்து விவசாயிகளுக்கு பெரிதாக ஏதும் உதவ முடியவில்லை என்றாலும் கூட, எங்களது சேவை விவசாயிகளுக்கு ஒரு அணில் சேவையாக இருக்கும் என தெரிவித்தார்.