ஷர்வானந்தின் அடுத்த படத்திற்கு பவன் கல்யாண் பட தலைப்பா?
பவன் கல்யாண் பட தலைப்பை மற்ற நடிகர்கள் பயன்படுத்துவது இது முதல் முறை இல்லை.;
சென்னை,
கடந்த 2003-ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் "ஜானி". இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்திருந்தாலும் அவரது ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இந்நிலையில், 'எங்கேயும் எப்போதும்'பட நடிகர் ஷர்வானந்தின் அடுத்த படத்திற்கு "ஜானி" எனப்பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவ்வாறு பவன் கல்யாண் பட தலைப்பை மற்ற நடிகர்கள் பயன்படுத்துவது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்பு விஜய் தேவரகொண்டாவின் 'குஷி', வருண் தேஜின் 'டோலி பிரேமா', நிதினின் 'தம்முடு' ஆகியவை பவன் கல்யாண் நடித்த படங்களில் தலைப்புகளாகும்.
தற்போது நடிகர் ஷர்வானந்த் 'நரி நரி நடுமா முராரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இப்படத்தை சமாஜவரகமனா புகழ் ராம் அப்பாராஜு இயக்குகிறார்.
சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.