'ஓஜி': 'சலாரைப்போல இல்லை' - தனது கதாபாத்திரம் குறித்து மனம் திறந்த ஸ்ரீயா ரெட்டி

'ஓஜி' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை ஸ்ரேயா ரெட்டி மனம் திறந்து பேசினார்.

Update: 2024-12-27 03:22 GMT

சென்னை,

விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்து பிரபலமான ஸ்ரீயா ரெட்டி , சமீபத்தில் பிரபாஸ் நடித்த சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தையடுத்து ஸ்ரீயா ரெட்டி தற்போது இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' படத்தில் நடித்து வருகிறார்.

பவன் கயாண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்க, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை ஸ்ரீயா ரெட்டி மனம் திறந்து பேசினார். இது குறித்து அவர் பேசுகையில்,

'ஓஜியில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருக்கிறது. அது சாலாரில் நான் நடித்த ராதா ராமா மன்னரைப் போல இல்லை. இது மிகவும் வித்தியாசமானது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்