துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டால் சம்பளமே வேண்டாம் - நடிகை பிரக்யா நாக்ரா
கவர்ச்சியில் பெண்களை அழகாக காட்டுவதில் தவறே கிடையாது என்று நடிகை பிரக்யா நாக்ரா கூறியுள்ளார்.;
அரியானாவில் பிறந்து வளர்ந்த பிரக்யாவுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான விளம்பரங்களில் நடித்துள்ளார். பிரக்யாவின் அப்பா ராணுவத்தில் இருந்ததால் வேலை காரணமாக அடிக்கடி சென்னை வந்தார். அவரோடு அடிக்கடி சென்னை வந்த பிரக்யாவுக்கு சென்னை பரிச்சயம் ஏற்பட்டது.
சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படி இவர் நடித்த லாக்டவுன் காதல் எனும் குறும்படம் யூடியூப்பில் வெளியானது. அஞ்சலி எனும் சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.
'வரலாறு முக்கியம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், பிரக்யா நாக்ரா. அடுத்து 'என்.4' படத்திலும் நடித்து அசத்தினார். மலையாளத்தில் இவர் நடித்த 'நதிக்காலில் சுந்தரி யமுனா' படம் இவரை இன்னும் பிரபலமாக்கியது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ் ஆக உள்ள பிரக்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.
ஜெய் மற்றும் நடிகை பிரக்யா நாக்ரா திருமணம் செய்து கொண்டதை உணர்த்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. 'பேபி & பேபி' படத்தில் ஜெய்யின் ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டால் சம்பளமே வேண்டாம் என்றும் கவர்ச்சியில் பெண்களை அழகாக காட்டுவதில் தவறே கிடையாது என்றும் நடிகை பிரக்யா நாக்ரா கூறியுள்ளார்.