விஜய் நடிக்க மறுத்து ஹிட் அடித்த 5 படங்கள்

விஜய், 'லியோ' படத்திற்குப் பிறகு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2024-08-07 14:28 GMT

சென்னை,

நடிகர் விஜய் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் அதிகப்படியான வெற்றிப்படங்களை கொடுத்து வசூல் ராஜா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

விஜய், 'லியோ' படத்திற்குப் பிறகு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அவர் தனது திரையுலக வாழ்க்கையை முடித்துக்கொண்டு அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது, விஜய் நிராகரித்த சில சூப்பர்ஹிட் தமிழ் படங்களை தற்போது காணலாம்.

1.தீனா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் தீனா. கடந்த 2001ம் ஆண்டு வெளியான இப்படம் அஜித்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் அது அஜித்தை நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. இப்படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்து பின்னர் நிராகரித்துவிட்டார்.

2. சிங்கம்

ஹரி இயக்கத்தில் சூர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த படம் சிங்கம். இந்தத் படம் 2010-ம் ஆண்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து இப்படத்தின் பல பாகங்கள் வெளியாகின. இந்த படத்தில் நடிக்க முதலில் விஜய்யிடம் பேசப்பட்டது, ஆனால் அதை விஜய் மறுத்துவிட்டார்.

3. சண்டக்கோழி

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் மற்றும் மீரா ஜாஸ்மின் முக்கிய வேடங்களில் நடித்த படம் சண்டக்கோழி . இப்படம் 2005-ம் ஆண்டு வெளியானது. இது விஷால் படங்களில் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகும். இப்படத்தின், முதல் பாதியைக் கேட்ட விஜய் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது,

4. தூள்

தரணி இயக்கிய தூள் படத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமா சென், விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 2003-ம் ஆண்டு வெளியானது. மேலும் இது விக்ரமின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகும். இப்படத்தில், விஜய் நடிக்க மறுத்திருக்கிறார்.

5. முதல்வன்

ஷங்கர் இயக்கிய முதல்வன், கோலிவுட்டின் சிறந்த அரசியல் சார்ந்த படங்களில் ஒன்றாகும். இதில் அர்ஜுன், ரகுவரன் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 1999-ம் ஆண்டு வெளியானது. கமர்ஷியல் படங்களில் நடிக்க வேண்டும் என்றும், அரசியல் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்றும் விஜய் அப்போதே படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்