வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோகன்லால் ஆறுதல்

நடிகர் மோகன்லால் கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கினார்.

Update: 2024-08-03 06:58 GMT

வயநாடு,

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் நடிகர் விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர். இதை தொடர்ந்து, மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து ரூ.35 லட்சம் நன்கொடை அளித்தனர். மேலும் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் மோகன்லால் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மோகன்லால் மேப்பாடி பகுதிக்கு சென்றுள்ளார்.

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், காவல்துறையினர், மீட்புக் குழுக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிகளை அவர் பாராட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், இதுபோன்ற சவாலான காலங்களில் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், துன்பங்களை எதிர்கொண்டாலும், நாம் எப்போதும் பலமாக வெளிப்பட்டிருக்கிறோம். இந்த சவாலான காலங்களில் நாம் ஒற்றுமையாக இருப்போம், நமது உறுதியை வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்