'பரோஸ்': புரோமோ வெளியிட்டு அனிமேஷன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய மோகன்லால்
பரோஸ் படத்தில் உள்ள 'வூடூ' என்ற அனிமேஷன் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை,
நடிகர் மோகன்லால் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் பரோஸ். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் இவருடன் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பில் 3டி-யில் உருவாகியுள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் உள்ள 'வூடூ' என்ற அனிமேஷன் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புரோமோவை நடிகர் மோகன்லால் வெளிட்யிட்டுள்ளார். இந்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.