நடிகர் நாக சவுர்யாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது

நாக சவுர்யா, கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ரங்கபலி படத்தில் நடித்திருந்தார்.;

Update:2025-01-25 06:18 IST
Meet The Bad Boy Karthik

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. இவர் கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ரங்கபலி படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகாதநிலையில், தற்போது இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ஸ்ரீ வைஷ்ணவி பிலிம்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீநிவாச ராவ் சிந்தலபுடி இப்படத்தை தயாரிக்கிறார். மேலும், அறிமுக இயக்குனர் ராம் தேசினாவுடன் இப்படத்தை இயக்குகிறார்.

கடந்த 22-ம் தேதி நாக சவுர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. அதன்படி, இப்படத்திற்கு 'பேட் பாய் கார்த்திக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விதி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் நரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ரசூல் எல்லோரு ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்