தனுஷ் இயக்கிய படத்திற்கு மாரி செல்வராஜ் கொடுத்த விமர்சனம்

தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கு மாரி செல்வராஜ் விமர்சனம் கொடுத்துள்ளார்.;

Update:2025-02-10 07:10 IST

சென்னை,

பிரபல இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'கர்ணன், மாமன்னன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 'வாழை' படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கு மாரி செல்வராஜ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் வழக்கமான காதல் கதையை கண்டு ரசித்தேன். ஆனாலும், தனுஷ் உருவாக்கியுள்ள உலகத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் கண்டு உற்சாகமடைந்தேன். இதை திரையில் காணும் அனைவருக்குமே இந்த உற்சாகம் ஏற்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்