ஸ்ரீலீலா நடிக்கும் 'ராபின்ஹுட்' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் பிரபல நடிகை

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' சமீபத்தில் வெளியாகி வைரலானது.;

Update:2024-12-11 08:22 IST
Ketika Sharmas special song in Nithiins Robinhood

சென்னை,

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா, கடந்த 5-ம் தேதி சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

மறுபுறம் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்குகிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அதிதா சர்ப்ரைஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடியுள்ளார்.

இப்பாடல் நேற்றே வெளியாக இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறிய படக்குழு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்