'ஜின்': 'படத்தில் எனது கதாபாத்திரம் என்னைப் பிரதிபலிக்கிறது'- நடிகை பவ்யா திரிகா

இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து நடிகை பவ்யா திரிகா பகிர்ந்துள்ளார்.

Update: 2024-12-27 02:10 GMT

சென்னை,

விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, வேலாயுதம் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் டி.ஆர்.பாலா. இவர் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் முகேன் ராவை வைத்து 'ஜின்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக ஜோ பட நடிகை பவ்யா திரிகா நடிக்கிறார்.மேலும், பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து நடிகை பவ்யா திரிகா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'இப்படத்தில் எனது கதாபாத்திரம் பிரியா. அது என்னை அப்படியே பிரதிபலிக்கிறது. ஏனென்றால் பிரியா இனிமையானவள் அக்கறையுள்ளவள். நானும் அப்படித்தான். பிரியா என்பது ஒரு பொதுவான பெயர் என்று எனக்குத் தெரியும், ஆனால் எனது கதாபாத்திரம் தனித்துவமானதாக இருக்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்