விஜய்யின் கடைசி படத்தை நான் தான் இயக்குகிறேன்- உறுதி செய்த இயக்குனர்

அடுத்ததாக நடிகர் விஜய் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார்;

Update: 2024-08-16 01:06 GMT

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. . கோட் படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.

அடுத்ததாக நடிகர் விஜய் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

இந்நிலையில், 'தளபதி 69' படத்தை நான் தான் இயக்குகிறேன் என  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார். மேலும் இது அரசியல் படம் அல்ல, கமர்ஷியல் படம் தான் என அவர் கூறி இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்