கைவிடப்பட்டதா 'அனுமான்' பட இயக்குனரின் 'சிம்பா' ? - தயாரிப்பாளர்கள் பதில்

பிரசாந்த் வர்மா இயக்கும் 'சிம்பா' படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார்.

Update: 2024-12-20 02:07 GMT

சென்னை,

'ஹனுமான்' படத்தையடுத்து பிரசாந்த் வர்மா இயக்கும் படம் 'சிம்பா'. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார். ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்சன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.

இதன்பின்பு இப்படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாதநிலையில், 'சிம்பா' படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

'பிரசாந்த் வர்மா - மோக்சக்னா நந்தமுரி ஆகியோரின் சிம்பா படம் பற்றி பரவி வரும் வியூகங்களுக்கு தற்போது தீர்வு காண விரும்புகிறோம். இப்படம் தொடர்பாக ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அவை உண்மையல்ல. அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் எங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் மூலம் மட்டுமே பகிரப்படும். அதுவரை, தவறான தகவல்கள் பகிர்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்