'என் அடுத்த படம் அவருடன்தான்' - மோகன்லால்

மோகன்லால் இயக்கி நடித்துள்ள 'பரோஸ்' படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

Update: 2024-12-20 03:34 GMT

சென்னை,

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், 'நெரு', 'மலைக்கோட்டை வாலிபன்' படங்களைத்தொடர்ந்து தனது 360-வது படமான 'துடரும்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை, 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.

மறுபுறம், மோகன்லால் இயக்கி நடித்துள்ள 'பரோஸ்'படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி வைரலானநிலையில், மோகன்லால் தற்போது தனது அடுத்த படத்திற்காக அப்டேட்டை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய மோகன்லால், தனது அடுத்த படத்தை ஆவேஷம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்க உள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஆவேஷம்' படத்தின் இயக்குனருடன் இணைந்து படம் பண்ணப் போகிறேன், அதற்காக நிறைய கதைகள் கேட்டு வருகிறேன்' என்றார். பகத்பாசில் நடிப்பில் வெளியாகி இருந்த ஆவேஷம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றநிலையில், அந்த இயக்குனருடன் மோகன்லால் இணைய இருப்பதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்