"குட் பேட் அக்லி" படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-03-18 16:09 IST
"குட் பேட் அக்லி" படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.


கடந்த 28-ம் தேதி வெளியான இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வரும் என்று தெரிவித்திருந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது அடுத்த அப்டேட் கொடுத்திருக்கிறார்.

அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஓஜி சம்பவம்...குட் பேட் அக்லி முதல் பாடலில் அஜித்தின் அனல் பறக்கும் வசனங்கள் இடம்பெற உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

'குட் பேட் அக்லி' படத்தின் 'ஓஜி சம்பவம்' பாடலுக்கான புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர். படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்